பிரான்ஸில் பரவிய கொரோனா:2019 இறுதி மாதமே
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிச.,15 தேதி முதலே பரவத் தொடங்கிவிட்டது என டாக்டர்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதன்மூலம் ஐரோப்பாவில் கொரோனாவின் தாக்கம் 2020 ஜனவரிக்கு முன்னரே இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
தலைநகர் பாரீஸில் உள்ள மருத்துவமனை டாக்டர்கள் கூற்றுப்படி கொரோனா வைரஸ் சத்தமில்லாமல் பிரான்சுக்குள் பரவியது கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்தே டாக்டர்களால் அதன் வீரியத்தை கண்டுபிடிக்க முடிந்தது என்கின்றனர்.
இன்டர்நேஷன் ஜோர்னல் ஆஃப் ஆண்டி மைக்ரோபியல் ஏஜண்ட்ஸ் என்கிற புத்தகத்தில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. பாரிஸ் மருத்துவமனையில் டிச.,15ல் 45 வயதுக்கு மேற்பட்ட இருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு மிதமான ஃபுளு காய்ச்சல் போல அறிகுறி தென்பட்டது. இதில் ஒருவருக்கு தொடர் காய்ச்சல் அறிகுறி இருந்தது.
இவர்கள் இருவரது வெளிநாட்டு பயணங்களை ஆராய்ந்தபோது இருவருமே வூஹான் நகருக்கு சென்று வந்தது தெரியவந்தது.அதன்பின்னர், சீனா செல்லாதவர்களுக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டது. இதனால் சீனாவில் கொரோனா பரவிய காலத்தில் பிரான்ஸில் கொரோனா பரவியது தெரியவில்லை. ஆனால் ஜன., மாதமே பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் டாக்டர்கள் கவனம் இல்லாமல் கொரோனா பரவ துவங்கிவிட்டது.
இதேபோல வடக்கு இத்தாலி அருகே உள்ள கொடோங்கோ என்ற நகரில் பிப்., மாதமே கொரோனா தாக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. ஆனால் இது உயிரைப் பறிக்கும் கொரோனா காய்ச்சல் என அப்போது டாக்டர்களால் கண்டறிய முடியவில்லை. சாதாரண வைரஸ் காய்ச்சல் என்றே நினைத்தனர். இதுவே பின்னாட்களில் வினையாகிப்போனது. கொரோனா வைரஸ் உயிரைப் பறிக்கும் அளவு வீரியம் மிக்கது என அப்போது யாரும் கணிக்கவில்லை. அப்படியே கொரோனா தாக்கினாலும் சில நாட்கள் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமாகி விடும் சாதாரண வைரஸ் என குறைத்து மதிப்பிட்டனர்.

.jpeg
)