ஹற்றனில் 20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ!!
ஹற்றன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா பகுதியில் 20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின.
டிக்கோயா, மணிக்கவத்தை 3ஆம் பிரிவு தோட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மதியம் ஒரு மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் 89 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உரிய இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் இருக்கையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டதால் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு ஓடிவந்தனர். இதனையடுத்து பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.
இதற்கிடையில், அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தீ விபத்தால் பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.
நோர்வூட் பிரதேச சபையின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பொலிஸ் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




