சுகாதார அமைச்சர் நாட்டுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!!

கொரோனா நெருக்கடி காரணமாக முடக்கப்பட்டிருந்த நாடு, நாளை முதல் பல்வேறு வரையறைகளுடன் தளர்த்தப்படும் நிலையில், அதனைக் காரணமாக வைத்து மக்கள் நகரங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நாடு முடக்க நிலையிலிருந்து தளர்த்தப்பட்டதும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாளை நாட்டைத் திறப்பதன் ஊடாக அரசாங்கம் இரு விடயங்களையே பிரதானமாக எதிர்பார்க்கிறது.
முதலாவதாக பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக தனியார்துறை நடவடிக்கைகளை ஆரம்பித்தல், இரண்டாவது பொருளாதாரத்திற்கு உயிரூட்டுவதற்காக அரச இயந்திரத்தைச் செயற்படுத்தல் ஆகியவை ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே நாடு திறக்கப்பட்ட பின்னர் மக்கள் அநாவசியமான காரணங்களுக்காக வெளியில் செல்வதையோ அல்லது ஒன்றிணைவதையோ நாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தற்போதுவரை பண்டாரநாயக்க மற்றும் சுதுவல்ல உள்ளிட்ட அவதானத்திற்குரிய பகுதிகளில் புதிய நோயாளர்கள் எவரும் அடையாளங்காணப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
கடந்த ஒருவார காலமாக மக்கள் மத்தியில் தொற்று ஏற்பட்டதாக அறியப்படவில்லை. வெலிசர கடற்படை முகாமின் வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோருக்கே தொற்று ஏற்பட்டிருக்கிறது.
இவற்றைக் கருத்திற்கொண்டே நாட்டில் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காக முடக்கத்தைத் தளர்த்துவதற்குத் தீர்மானித்தோம்.
எனவே இதனைப் புரிந்துகொண்டு நாளையிலிருந்து அநாவசியமாக வெளியில் செல்வதையும், நகரங்களில் ஒன்றுகூடுவதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதன்போது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.