சீன-இந்தியப் படையினருக்கு இடையில் மோதல்!

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.

சிக்கிம் மாநிலத்தின் நாகு-லா பகுதியில் அமைந்துள்ள எல்லையில் நேற்று (சனிக்கிழமை) வழக்கம்போல இந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு ரோந்துப் பணிக்காக வந்த சீனப் படையினர், இது தங்கள் நாட்டிற்குச் சொந்தமான பகுதி எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்திய-சீன பாதுகாப்புப் படையினர் மாறிமாறி கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர்.
இந்தச் சண்டையில் 150 பேர் ஈடுபட்டதாகவும் அதில் 4 இந்திய வீரர்களும் 7 சீன வீரர்களும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் உடனடியாக இந்தியப் படைகளும், சீனப் படைகளும் அங்கு விரைந்து சென்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, இரு நாடுகளின் இராணுவத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இரு தரப்பினரும் அமைதியான முறையில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள சமரசம் செய்யப்பட்டது. இதனால் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன படையினர் வெளியேறினர்.
இதையடுத்து குறித்த பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.