பொலிஸார் வேலி பாய்ந்த விவகாரம் தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய தகவல்!

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதியில் நேற்று சிவில் உடையில் பொலிசார் வேலி பாய்ந்த விவகாரம் காதல் விவகாரம் ஒன்றை அடிப்படையாக கொண்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (9) சண்டிலிப்பாய், இரட்டைப்புலவு வைரவர் கோவிலுக்கு அருகிலுள்ள வீடொன்றில் இந்த மோதல் நடந்தது.
சிவில் உடையில் சென்ற மானிப்பாய் பொலிசார் இருவர், வீட்டுக்குள் நுழைந்து இளைஞனை தாக்கியுள்ளனர்.
இதன்போது அயலவர்களும் கூடி, அங்கு பெரும் களேபரமானது. மோதலில் இளைஞன் ஒருவரும், பொலிசார் ஒருவரும் காயமடைந்தனர்.
இந்த மோதல் விவகாரம் காதல் விவகாரம் ஒன்றை அடிப்படையாக கொண்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கும் அப்பகுதியை சேர்ந்த யுவதி ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதற்கு யுவதியின் தந்தை கடும் எதிர்ப்பை தெரிவித்து இளைஞனை பல தடவைகள் மிரட்டியுள்ளார்.
எனினும், காதலை கைவிட இளைஞன் மறுத்து வந்துள்ளார். இதையடுத்து, தனக்கும் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் இடையில் உள்ள செல்வாக்கான நட்புறவை பயன்படுத்தி, பொலிஸ் முறைப்பாடு எதுவுமின்றி தம்மை மிரட்ட முயற்சிப்பதாக இளைஞனின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று சனிக்கிழமை, மதியம் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இளைஞனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இளைஞனை தாக்கியுள்ளனர்.
சிவில் உடையில் இருந்த பொலிசாரை, இளைஞனின் சகோதரர்களும் அயல்வீட்டாரும் சேர்ந்து நையப்புடைத்துள்ளனர்.
அதனால் அங்கிருந்து தப்பித்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்து மேலதிக பொலிஸாரை வரவழைத்து தம் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தியதுடன், வீட்டின் வேலி மற்றும் மதில் என்பவற்றையும் சேதமாக்கினார்கள்.
பின்னர் அங்கிருந்த ஐந்து இளைஞர்களை, கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அதேவேளை, முன்னதாக சிவில் உடையில் வந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் தாக்கியதில் காயமடைந்த இளைஞனை நோயாளர் காவு வண்டியை அழைத்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது, பொலிஸார் நோயாளர் காவு வண்டியை திருப்பி அனுப்பினர் எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.