பார்சிலோனா சாலையில் ஸ்ரேயாவின் 'மழை' நடனம்!

மழை படத்தில் வரும் 'நீ வரும் போது நான் மறைவேனா' பாடலில் ஆடிய நடனத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. தற்போது அதனை நினைவூட்டும் வகையில் பார்சிலோனா சாலையில் மீண்டும் அதே பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

ஸ்ரேயா சரண் தனது கணவர் ஆண்ட்ரி கோஷீவ் உடன் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருக்கிறார். ஸ்பெயின் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், வாழ்க்கைக்கு தேவையான பல நேர்மறையான விஷயங்களை ஸ்ரேயா செய்துவருகிறார். யோகா, நடனம், ரசிகர்களுடன் உரையாடல் என பலவித ஆக்கபூர்வமான முயற்சிகளைச் செய்து தன்னை பிஸியாகவே வைத்திருக்கிறார் ஸ்ரேயா. பயிற்சி பெற்ற கிளாசிக்கல் நடனக் கலைஞரும் கதக் கலைஞருமான இவர், சமீபத்தில் நடனமாட வீதிகளில் இறங்கினார்.முதலில் ஒரு பிரபலமான பாடலுக்கு தான் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா, இந்தக் கொண்டாட்டத்தில் தன் கணவரையும் இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் நடித்த மழை திரைப்படத்திலிருந்து, "நீ வரும் போது நான் மறைவேனா" என்ற பாடலை நடனமாடிய இவர், பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவுக்கு தன் நன்றியை தெரிவித்தார். இப்பாடல் தான் ஸ்ரேயாவின் கலையுலக வாழ்க்கைக்கு 'என்ட்ரி'யாக அமைந்தது என்பதால் அதில் பணியாற்றிய பிருந்தாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


மேலும் தன்னுடைய பதிவில், "நான் சொல்வது எல்லாம் காதலுக்கு நாம் ஒரு வாய்ப்பைக் கொடுப்போம் என்பதே. பார்சிலோனாவில் இன்னொரு மழை நாள் .... நீ வரும் போது நான் மறைவேனா... பிருந்தா கோபால் இந்த அருமையான பாடலுக்கு நடனம் அமைத்ததிற்கு நன்றி. எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று ...." எனக் குறிப்பிட்டுள்ளார்.

-முகேஷ் சுப்ரமணியம்
Powered by Blogger.