விஜய்யின் ரசிகையானேன்: மாஸ்டர் ரகசியம் கூறும் ஆண்ட்ரியா

விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா, முதன்முறையாக படம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

பாடகியாகவும் நடிகையாகவும் பல பரிமாணங்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவர் ஆண்ட்ரியா. தனக்கு கதாபாத்திரம் பிடித்தால் மட்டுமே படங்களில் பணியாற்றும் வழக்கம் கொண்ட ஆண்ட்ரியா, மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. அவரது கதாபாத்திரம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், நடிகை ஆண்ட்ரியா மிகவும் எதிர்பார்க்கப்படும் மாஸ்டர் படத்தில் தனது பங்கைப் பற்றி ஒரு சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.மாஸ்டர் படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டுக்கு ஆண்ட்ரியா வராத போதும் கூட, மேடையிலேயே விஜய், 'ஆண்ட்ரியா தொடர்ந்து அதிக படங்களில் பணியாற்ற வேண்டும்' எனக் கூறியிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நேர்காணலில் தனது ரசிகர்களிடம் பேசிய இவர், மாஸ்டர் படப்பிடிப்பின் போது தான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகையாகி விட்டதாக ஒப்புக்கொண்டார். மேலும், மாஸ்டர் படத்தில் ஒரு கார் சேஸிங் காட்சி சிறப்பு அம்சமாக இருக்கும் என்றும் அந்த காட்சி தனக்கு மறக்கமுடியாத ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர், ஊரடங்கு முடிந்தபின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங் பாடல், சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

-முகேஷ் சுப்ரமணியம்
Powered by Blogger.