கல்முனை வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகள்!
அம்பாறை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மூன்றாவது தடவையாகவும் 3 குழந்தைகளை ஒரே சூலில் பொத்துவில் பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35 வயதுடைய பொத்துவில் நகரப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரவச வலி ஏற்பட்டதை அடுத்து நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 3 குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார்.
2 ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தையும் உள்ளடங்குவதுடன் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மயக்க மருத்துவ நிபுணர் சுதேஸ்வரியின் கண்காணிப்பில் குறித்த சத்திர சிகிச்சையினை அறுவை சத்திர சிகிச்சை நிபுணர் கிரந்த பிரசாத் உள்ளிடங்கலாக மகப்பேற்று வைத்திய நிபுணர் ராஜிவ் விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் இந்த சந்திர சிகிற்சையினை மேற்கொண்டனர்.
இதில் இரு ஆண் குழந்தைகளும் 1910 கிராம்,1960 கிராம் மற்றும் பெண் குழந்தை 1480 கிராம் நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இதே போன்று கடந்த மாதமும் இதே மாதமும் நிந்தவூர் மற்றும் கோமாரி பகுதியை சேர்ந்த இரு பெண்களுக்கு ஒரே சூலில் 3 குழந்தைகள் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




