கொரோனா பாதிப்பு- குருநாகல் மாவட்டத்தில் அதிகரிப்பு!!

குருநாகல் மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 37 பேர் வெலிசற கடற்படையைச் சேர்ந்தவர்கள் என வடமேல் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் என்.பரீட் தெரிவித்துள்ளார்.
ஏனைய 23 பேரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியவர்களுடன் நேரடி தொடர்பினை வைத்திருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குருநாகலில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானவர் குருநாகல் பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.