கொரோனாவை சாதகமாக்கி தாக்குதல்களை தீவிரப்படுத்தும் ஐ.எஸ்


கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அதிக தாக்குதலில் ஈடுபட்டு வருவது, ஈராக் மற்றும் சிரியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஈராக் மற்றும் சிரியாவில் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றி, உலக நாடுகளையும் அச்சுறுத்தினர். அமெரிக்கப் படைகள் உதவியுடன் கடந்த, 2017ல், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து, ஈராக் மற்றும் சிரியா மீட்கப்பட்டன. அதன்பிறகு, ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் வெகுவாக குறைந்தன.


தற்போது, உலக நாடுகளை புரட்டி போட்டுள்ள, கொரோனா வைரஸ் பாதிப்பில், ஈராக் மற்றும் சிரியாவும் சிக்கியுள்ளன. அங்கு, ஊரடங்கு அமலில் உள்ளது. இதை பயன்படுத்தி, கடந்த சில வாரங்களுக்கு முன் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஈராக் ராணுவ முகாமுக்குள் நுழைந்து, நடத்திய தாக்குதலில், 10 ஈராக் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

ஈராக்கைப் போல சிரியாவிலும், இந்த பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் மற்றும் தீவிர தாக்குதலில் நேரடியாக ஈடுபடுகின்றனர். இதிலும் ராணுவ முகாம்களை குறிவைத்து அதிநவீன ஆயுதங்களுடன் அதிக தாக்குதல்களை நடத்துகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் ஐ.எஸ்., பயங்கரவாதம் மீண்டும் முளைத்து மிகப் பெரிய அபாயமே ஏற்படும் என கூறப்படுகிறது.
Blogger இயக்குவது.