நியூஸிலாந்தில் இரண்டாவது நாளாகவும் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகவில்லை!
நியூஸிலாந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் நடுப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து நாடு பூஜ்ஜிய தொற்றை பதிவு செய்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
நியூஸிலாந்து சமூக பரவலை முற்றிலும் தடுப்பதில் வெற்றி கண்டுள்ளதாக, நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அண்மையில் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நியூஸிலாந்தில் நடைமுறையில் இருந்த இறுக்கமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை எளிதாக்கப்பட்டது. இதன் ஊடாக, உலகிலேயே மிக பாதுகாப்பான நாடு என்ற அந்தஸ்தை நியூஸிலாந்து பெற்றுள்ளது.
நியூஸிலாந்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1487பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1276பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20பேர் உயிரிழந்துள்ளனர். 291பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




