ட்ரம்ப்பின் உதவியாளருக்கு வைரஸ் தொற்று!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பிரத்தியேக உதவியாளர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது.
வெள்ளை மாளிகையில் பணியாற்றி வரும் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமையினை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
எனினும், குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஹொகான் ஜிட்லி, ‘நாம் எமது வெள்ளை மாளிகையின் மருத்துவ குழு ஊடாக வெள்ளை மாளிகை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் ஜனாதிபதி மற்றும் உப ஜனாதிபதி ஆகியோரை பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், ‘இது சற்று சவாலான விடயமே ஆனாலும் வழக்கமான ஒன்று தான்.
நான் ஏற்கனவே சொன்னது போல மாகாண ஆளுநர்கள் உட்பட அனைவரும் இந்நாட்டின் போராளிகளாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தற்போது நாம் அனைவரும் போராளிகள். எனக்கு மிக சிறிய அளவிலான மனிதர்களுடனான தொடர்புகளே உள்ளன’ என தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




