கண்ணீர்ப்புகை குண்டைவீசி சந்தேக நபர்களை கைதுசெய்த பொலிஸார்!!

இரண்டு சகோதரர்களை கைது செய்வதற்காக பொலிசார் அந்த வீட்டின் மீது கண்ணீர்ப்புகை குண்டு தாக்குதலை நடத்த வேண்டிய நிலைமையேற்பட்டது.

இந்த சம்பவம் அலவ்வ மாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இருவரும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்டையவர்கள், தினமும் அயலவர்களை துன்புறுத்துகிறார்கள் என அயலவர்கள் தொடர்ந்து பொலிசாரிடம் முறையிட்டு வந்தனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரும் நேற்று அயல்வீடுகளை வாள், கொட்டன்களால் அடித்து சேதப்படுத்தி, அட்டகாசம் புரிந்துள்ளனர்.
இந்த காட்சிகள் அங்குள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளன.
சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்றபோது, சந்தேக நபர்கள் பொலிசாரையும் தாக்க முயற்சித்ததுடன் வீட்டின் கூரையில் ஏறி, பொலிசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து அவர்களை கைது செய்ய பொலிசார் பகீரத பிரயத்தனம் செய்தும் பலனளிக்காத நிலையில், வீட்டின் மீது கண்ணீர்ப்புகை குண்டு தாக்குதலை நடத்தினர். இதன் பின்னரே அவர்களை கைது செய்ய முடிந்ததாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு கைதானவர்கள் 20,22 வயதுடையவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதன் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகநபர்களில் வீட்டில் சட்டவிரோத மதுபான உற்பத்தி பொருட்கள் மீட்கப்பட்டன.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.