சட்டதிட்டங்களை மீறி மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் சட்டதிட்டங்களை மீறி மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசசபை, ஒன்று கூடல் மண்டபத்தில், அதன் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில், சட்டவிரோத மண்ணகழ்வு நடவடிக்கை தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மண் அகழ்வில் ஈடுபடுவோர், மண் விற்பனையில் ஈடுபடுவோரும் கலந்துகொண்டனர். இதன்போது மண் அகழ்வின்போது முன்னெடுக்கப்படவேண்டிய வழிமுறைகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பகுதிக்குள் மண் அனுமதிபெற்று ஏற்றுகின்றவர்கள், பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கும் பாத சாரதிகளுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் மண் அகழ்வு மேற்கொள்ளும் அவசியம் குறித்து போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளரினால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக கண்ணபுரம் பாடசாலை வீதி, மண் அகழ்வு மேற்கொண்டு முற்றாக பாதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் மற்றும் கனரக வாகனத்தினால் புழூதி,தூசி என்பவற்றால் பாடசாலையில், மாணவர்கள் கற்றல் நடவடிக்கை மேற்கொள்வதில் சிரமப்படுவது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.
அரச சட்டதிட்டத்துக்கு அமைவாக பதிவு செய்து, நீங்கள் அதற்கான அனுமதியினை பெற்று உரிய இடத்தில் மண் அகழ்வு மேற்கொள்ளலாம்.
கொரொனா நோயினால் தற்போது பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும்போது பாடசாலை முடியும் போதும் கனரக வாகனங்கள் ஓட்டுவதனை நிறுத்த வேன்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றும் நடவடிக்கைகளை விசேட அதிரடிப்படை, பொலிஸ், இராணுவம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்துவது குறித்தும் கருத்துகள் முன்வைப்பட்டன.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இடங்களில் மாத்திரம் மண்அகழ்வு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி சந்தனமடு ஆறு, வீர வெட்டு ஆற்று மயிலுறுப்பான் ஆகிய பகுதிகளே தீர்மானிக்கப்பட்டதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மணல் அகழ்வுக்கு விண்ணப்பிக்கின்றவர்கள் 1. தொழில் இல்லாமல் இருக்கின்றவர்கள் 2.மணல் அகழ்வு இடத்திற்கு பக்கத்தில் உள்ளவர்கள் 3.மட்டக்களப்பு மாவட்டமாக இருக்க வேண்டும். அவ்வாறு உள்ளவர்களுக்கு சிபாரிசு செய்யப்படும் 1மாதத்துக்கு 35 கீப் மண் மட்டும் ஏற்ற அனுமதி வழங்கப்படும். அத்தோடு சொந்த வயல் காணி திருத்தும் போது எந்த அனுமதியும் எடுக்க தேவையில்லை எனவும் வேறு இடத்துக்கு மண் கொண்டு செல்வதாக இருந்தால் உரிய முறையில் அனுமதிப்பத்திரம் எடுக்க வேண்டும் எனவும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் இங்கு தெரிவித்தார்.
கனரக மண் ஏற்றுகின்றவர்கள் பொலித்தின் போட்டு மண்ணை மூட வேண்டும். வாகன சாரதி உதவியாளர் இருவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மாணவர்களுக்கு பொதுமக்களுக்கும் வீதி விபத்து ஏற்படாத வண்ணம் ஒட்ட வேண்டும் எனவும் இங்கு பொலிஸ் அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.
உரிய வகையில் அனுமதி எடுத்து மண் கொள்வனவு செய்ய வேன்டும். அவ்வாறு செயப்படாதவர்கள் சட்டரீதியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், மண் அகழ்வில் ஈடுபடுகின்றவர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு இறுதியான முடிவு எடுக்கப்பட்டு, கூட்டம் சுமுகமானதாக நிறைவடைந்தது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.