அஸாத் சாலிக்கு மீண்டும் பாதுகாவலர்கள்!!
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலிக்கு மீண்டும் தேவையான மெய்ப்பாதுகாவலர்களை வழங்குமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய , பதில் பொலீஸ் மாஅதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்றின் தலைவரும் முன்னாள் ஆளுநருமாகிய அஸாத் சாலிக்கு வழங்கப்பட்டிருந்த மெய்ப்பாதுகாப்புகள் கடந்த 30 ஆம் திகதி நவம்பர் மாதம் 2019 முதல் விலக்கிகொள்ளப்பட்டுள்ளது.
எவ்வித காரணங்களும் இன்றி அவருடைய மெய்ப்பாதுகாவலர்களை நீக்கியமை குறித்து தகுந்த காரணங்களை வெளியிட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் அஸாத் சாலிக்கு மீண்டும் தேவையான மெய்ப்பாதுகாவலர்களை வழங்குமாறும் தேர்தல் ஆணையாளர் பதில் பொலீஸ் மாஅதிபருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் குறித்த கடிதத்தின் பிரதிகள் அஸாத் சாலிக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




