மழையினால் திருமலை மீனவர்கள் பாதிப்பு!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் கரையோர பகுதிகள் அனைத்திலும் கடல் நீர் உற்புகுந்துள்ளது.

இதனால் மீனவர்களது படகுகள் கடற்கரையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டள்ள போதும் படகுகளை காப்பாற்றுவதற்காக எடுத்த முயற்சியில் பல படகுகள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
சீரற்ற காலநிலையால் இன்றுடன் ஐந்தாவது நாளாக கடற்றொழிலாளர்கள் தமது தொழிலை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 25000க்கும் அதிகமான மீனவர்கள் தமது வாழ்வாதாரததை இழந்தள்ளனர்.
தற்போது கொரொனா வைரஸ் தொற்று காரணமாக மீனவர்களின் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படாத காரணத்தால் மீன் விலை குறைந்து மீனவர்களின் பொருளாதார நிலையில் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் அம்பன் புயல் அச்சுறுத்தல் காரணமாக கடற்றொழில் முழுமையாக தடை செய்யப்பட்டள்ளமை மேலும் நிலைமையை மோசமடையச் செய்துள்ளது.
இந்நிலையில் தமது மீனவப்படகுகளுக்கான காப்புறுதிக்கு வருடத்திற்கு 2500ரூபா அறவிடப்படுவதாக தெரிவித்த மீனவர்கள், தமது படகுகள் முற்றாக சேதமடைந்தால் மாத்திரமே தமக்காண இழப்பீடுகள் வழங்கப்படுவதாகவும் சேதங்களுக்கு அவை வழங்கப்படுவதில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
வாகனங்களுக்கு ஏற்படும் சிறு கீறல்களுக்கு கூட காப்புறுதி நிறுவனங்களால் அதனை திருத்துவதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்ற போதும் சேதமடைந்த தம் படகுகளை திருத்தமுடியாமல் அல்லல்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்
எனவே அரசாங்கம் இவர்களின் நிலை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட மீனவ சமுதாயமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.