இராணுவம் மற்றும் சுகாதார திணைக்களத்தினர் வவுனியாவில் அதிரடி நடவடிக்கை!

வவுனியா சுகாதார திணைக்களத்தினால் இன்று வவுனியா நகர்ப் பகுதியில் அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ் தலைமையிலான அணியினரே வவுனியாவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை வழிமறித்து சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது போக்குவரத்து மேற்கொள்ளும் பேருந்தில் கொரனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான சுகாதார முறைகள் பின்பற்றப்படுகின்றதா, பயணிகள் முககவசம் போட்டுள்ளனரா என்பது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் பயணிகளுக்கும், சாரதி மற்றும் நடத்துனர்களுக்கும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
மேற்பார்வை சுகாதார பரிசோதகர் க. மேஜெயா மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இராணுவத்தினர் பொலிஸார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து இவ் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.