ரணில் – சஜித் தரப்பின் உறுப்பினர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு!

பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியை அதன் கூட்டணியில் சேர்க்கும், ஆனால் அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை வைத்திருப்பவர்களை தூக்கி எறியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார்.
“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியையும், எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் ராஜபக்ஷகர்களுடன் டீல் செய்துக் கொண்டிருந்ததன் காரணமாகவே சஜித் எதிர்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், நவீன் திஷாநாயக்கவை கண்ணாடியின் முன்னர் நின்று அவரது முகத்தை பார்த்து யார் ராஜபக்ஷக்களுடன் டீல் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று வினவிப்பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 17 பேரையும் அழைத்துக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து டீல் செய்து ஐ.தே.க.வின் வீழ்ச்சிக்கு வழியமைத்த அவர், இன்று எம்மீது குற்றம் சாட்டி வருகின்றார். அரசாங்கத்திடும் டீல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை.
கட்சி போட்டியிட வேண்டிய சின்னத்தின் வேறுபாடுகளாக இருவருமே ஏன் ஒன்று சேர முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை, இரு குழுக்களும் பிரிந்து செல்வதற்கான ஒரே காரணம் இதுதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.