விமான நிலையங்களில் சேவைகள் மீள ஆரம்பம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தொடர்ந்து மத்தள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதைத் தடுக்கப் பல மாற்று நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது என விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
"ஆண்டுதோறும், 10 முதல் 12 மில்லியன் பயண நடவடிக்கைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நடைபெறுகின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 18 முதல் 20 மில்லியன் வரை உயருமென மதிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைப்பட்டுள்ளன. இதனால் உலகிலுள்ள அனைத்து விமான நிலைய சேவைகளும் சரிவடைந்துள்ளன. சுகாதாரத் தரப்பு ஆலோசனையுடன் ஏனைய விமான நிலையங்களையும் திறக்கத் திட்டமிட்டுள்ளது" எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.