ரஷ்யாவில் 24மணிநேரத்தில்10,102பேருக்கு கொரோனா
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 10,102 பேருக்கு கொரோனா இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகின் பல நாடுகளையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி அழித்து வருகிறது. கொரோனாவை தடுக்க பல நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ரஷ்யாவிலும் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு , கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அதிபர் விளாடிமிர் புடின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதனால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 10 வது இடத்தில் இருந்து 8 வது இடத்திற்கு சென்றது. இந்நிலையில் மாஸ்கோவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,102 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,55,370 ஆக உள்ளது.
ரஷ்யாவின் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளின் சராசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து வருகிறது. நேற்றுமுன் தினம் 10,582 ஆக இருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 95 பேர் பலியாகினர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா பலி 1,451 ஆக அதிகரித்தது. 19,865 பேர் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)