ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்: வவுனியா பொலிசில் முறைப்பாடு

அரிசி ஆலை ஓன்றில் அதிக விலை பொறிக்கப்பட்ட அரிசி மூடைகள் மீட்கப்பட்டமை தொடர்பில் செய்தியை வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில்    முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.




வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் அண்மையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக பொறிக்கப்பட்ட அரிசி மூடைகள் நுகர்வோர் பாவனையாளர் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டு குறித்த அரிசி ஆலைக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.



இச் சம்பவத்தை ஊடக அறிக்கையிட்ட ஊடகவியலாளருக்கு மிரட்டும் வகையில் குறித்த அரிசி ஆலை உரிமையாளரால் அ ச்சுறுத் தல் விடுக்கப்பட்டுள்ளது. ‘கமராவை அ டித்து உ டைத்து, எனது பொடியளை சொல்லி மொச்சிருவேன்’ என அரச அதிகாரிகள் முன்னிலையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மிரட்டல் தொடர்பில் ஊடகவியலாளரால் வவுனியா பொலிசிஸ் நிலையத்தில் மு றைப் பாடு செய்யப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
Blogger இயக்குவது.