அழுத்தங்களுக்காக பாராளுமன்ற கூட்ட முடியாது – ஜி.எல். பீரிஸ்!!

மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்பினர் பெரும்பான்மையாக உள்ள பழைய நாடாளுமன்றை மீண்டும் கூட்டுவதானது, மக்களின் ஜனநாயக உரிமையை அவமரியாதைக்கு உட்படுத்தும் ஒரு செயலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதியின் அதிகாரங்கள் கொண்டு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டியத் தேவை இன்று கிடையாது.
சட்ட ரீதியாகவும், செயற்பாட்டு ரீதியாகவும் அதற்கான இடம் நாட்டில் இன்று கிடையாது. இதனை தெளிவுப்படுத்த நாம் தயாராகவே இருக்கிறோம். அதேநேரம், ஒரு அவசரமான தருணத்தின் போதுதான் ஜனாதிபதியால் நாடாளுமன்றைக் கூட்ட முடியும்.
அதைவிடுத்து அழுத்தங்கள், விமர்சனங்களை கருத்தில் கொண்டு நாடாளுமன்றைக் கூட்ட முடியாது. இவை இலங்கை அரசமைப்பில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை அவசரகால நிலைமையொன்று பிரகடனப்படுத்தப்படவில்லை.
எனவே, நாடாளுமன்றை கூட்ட வேண்டிய எந்தவொருத் தேவையும் கிடையாது. இந்த நிலையில், கீழ் தர அரசியல் லாபங்களை பெற்றுக் கொள்வதற்காகவே எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றைக் கூட்டுமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.
கடந்த நாடாளுமன்றம் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும். ஈஸ்டர் தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகவும், மத்திய வங்கியில் கொள்ளை இடம்பெறவும் காரணமாக இருந்த தரப்பினர்கள் தான் அந்த நாடாளுமன்றில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில், நாடாளுமன்றை மீண்டும் கூட்டுவதானது மக்களின் ஜனநாயக உரிமையை உதைத்தெறியும் ஒன்றாகத்தான் இருக்கிறது“ எனத் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.