வெசாக்கை முன்னிட்டு இன்று 3 முத்திரைகள் வெளியீடு!
இந்த ஆண்டின் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, மூன்று நினைவு முத்திரைகள் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளன.
குறித்த முத்திரைகள் வெளியிடும் நிகழ்வானது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
அதன்படி தபால் திணைக்களம் 10, 15 மற்றும் 45 ரூபா பெறுமதியுடைய முத்திரைகளையே இவ்வாறு வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்கள் வெசாக் பௌர்ணமி தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, 4 ஆம் திகதி முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




