சிங்கப்பூர் சென்றது சிறப்பு விமானம்!!

கொரோனா அச்சம் காரணமாக சிங்கப்பூரில் சிக்கித் தவித்த 180 இலங்கையைச் சேர்ந்த மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக சிறப்பு விமானமொன்று சென்றுள்ளது.

குறித்த விமானம் இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -302 என்ற சிறப்பு விமானமே இன்று காலை 7.30 மணியளவில் புறப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.
அத்துடன் அந்த விமானமானது இன்று மாலை 5.15 மணியளவில் இலங்கை மாணவர்களுடன் நாட்டை வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கொரோனா பரவல் காரணமாக நாட்டில் சிக்கித் தவித்த சுமார் 10 சிங்கப்பூர் பிரஜைகளும் சிறப்பு விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.