இறுதி அஞ்சலி நிகழ்வை அரசியலாக்காதீர்கள்- கோட்டாபய அதிருப்தி!!

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி அஞ்சலி நிகழ்வை, அரசியல் பிரச்சாரமாக தொண்டமானின் வாரிசுகள் நடத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவே, நேற்றையதினம் அவசரகதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க காரணமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் நிலவும் சமயத்தில், தொண்டமானின் நேற்றைய அஞ்சலி நிகழ்வுகள் சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தன.
தொண்டமானின் பூர்வீக இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்ட பின்னர் அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டதில் அவரது வாரிசுகள் அரசியல் செய்வதாக, கோட்டாபாயவிடம் சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துட்ன் இது சுகாதார நெருக்கடிகளை ஏற்படுத்தலாமென்றும் எச்சரித்துள்ளனர
இதையடுத்து அதிருப்தியடைந்த கோட்டா, இறுதிநிகழ்வில் அரசியல் செய்ய வேண்டாமென சம்பந்தப்பட்ட தரப்பினரை அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.