ராஜித சேனாரத்னவின் மகன் ஆட்சியை கவிழ்ப்போம் என சூழுரை!!

கடந்த 2015 ஜனவரி 8 ஆம் திகதி மஹிந்த அரசாங்கத்தை மண்கவ்வ வைத்ததுபோல அடுத்த சில மாதங்களில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தையும் வீழ்த்துவோம் என்றும் அதற்கான நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டதாகவும் ராஜித சேனாரத்னவின் மகனான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன சூளுரைத்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டுபட்டுவிட்டது, சஜித் அணியும், ரணில் தரப்பும் பிரிந்துவிட்டது என சந்தோஷமடைந்த ராஜபக்ச தரப்புக்கு, ராஜித சேனாரத்னவுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து குரல் கொடுத்துவருகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுவை ஆட்சேபித்து வழக்கு தாக்கல்செய்தவர்கூட ராஜிதவுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு முன்னிலையாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ராஜிதவை வைத்து முன்னெடுக்கவிருந்த அரசியல் ஆட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ராஜித சிறைவைக்கப்பட்டாலும், பிரிந்த ஜனநாயக அணிகள் நீதிக்காக ஒன்றிணைந்துள்ளதாகவும் சதுர சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சந்திரிக்கா, மஹிந்த ஆகியோரும் ராஜிதவை சிறையில் அடைப்பதற்கு முயற்சித்தபோது அது கைகூடவில்லை என தெரிவித்த அவர், சந்திரிக்கா, மஹிந்தவால் செய்யமுடியாமல்போனதை கோட்டாவுக்கு செய்வதற்கு இடமளிக்கமாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஜனநாயகத்துக்கான தமது போராட்டம் தொடரும் என்றும் அதற்கான அடித்தளம் ராஜித்தவின் கைதுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து ஆரம்பமாகிவிட்டதாகவும் ராஜ்தவின் மகன் கூறினார்.
மேலும் இந்த ஆட்சியை தோற்கடிக்கும்வரை அது தொடரும் என்றும், எம்மை கொலை செய்யலாம். ஆனால், தோற்கடிக்கமுடியாது எனக்கூறிய அவர் எந்தவொரு சவாலையும் தாம் ஏற்போம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.