விசமிகளால் இடுகாட்டில் கல்வெட்டுகள் சேதம்!!

நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, கும்பல் ஒன்று இடுகாட்டில் வைத்து கள்ளு குடித்துவிட்டு கல்வெட்டுகளை சேதப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.
குறித்த கும்பலைச் சேர்ந்த 5 பேர் நேற்றிரவு மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.