50 மாணவர்கள் பாகிஸ்தான் திரும்பினர்!!

இலங்கையில் கல்விகற்று வந்த பாகிஸ்தான் மாணவர்கள் 50 பேர் இன்று (திங்கட்கிழமை) பாகிஸ்தானுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று காலை 7 மணிக்கு பாகிஸ்தானின் கராச்சி நோக்கி குறித்த மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை, லண்டனிலிருந்து ஶ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானம் ஒன்றின் ஊடாக இன்று அதிகாலை 208 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.
இதனிடையே, நாட்டுக்கு மீளத்திரும்பும் எதிர்பார்ப்பில் பிரித்தானியாவிலுள்ள இலங்கை மாணவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை விசேட விமானமொன்று அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு அழைத்துவரப்படவுள்ள இலங்கை மாணவர்கள் , நாளை அதிகாலை நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.