வீதியில் சுற்றி திரிந்த முதியவர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

இந்த நபர் யார் என்பதனை அறிந்தவர்கள் தயவுசெய்து அறியத்தரவும். இவர் தற்போது திருக்கோவில் பிரதேசத்தில் உலாவிவருக்கின்றார்.

இன்றையத்தினம்(06.05) மாலை அளவில் திருக்கோவில் மணிக்கூட்டுகோபுரம் அருகாமையில் சுற்றித்திரிந்தார் இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவரிடம் வினவியபோது இவர் கிண்ணியா பிரதேசத்தினை சேர்ந்தவர் என கூறுகின்றார்.
இவர் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு காணப்படும் சந்தர்ப்பத்தில் இவர் எவ்வாறு இங்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த காலங்களில் இந்த நபர் மடடக்களப்பு, கல்முனை, காரைதீவு பிரதேசத்தில் இந்த நபர் சுற்றிதிரிவதாக முகநூலில் பதிவு இடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.