வண்ணமேகமே ....!! கவிதை!!

ஓடும் வண்ணமேகமே
வெண்மைகொஞ்சம் சேர்த்துவா...
நங்கையிவள் தூங்கும்போது
இருள் நனைக்கும் அல்லவா...


பூக்கும் வண்ண மலர்களை
வண்டு வந்து மோதுமே...
வண்டுவந்து மோதும்போது
மலரில் நாணம் சேருமே...

மலர்போலே நாணம்
கொண்டாள் இவள்தானே...
இவள்போலே நாணம்கொள்வாள் எவள்தானே..?

உயிரோடு உறவாடும் மூச்சுக்காத்தபோல...
நெஞ்சுக்குள் நீயிருந்து காட்டுறியே ஜாட...

வைகறையின் பொழுதிலே...
இவள் இதம் சேருமே...
தூங்குமுடல் பார்கும்போது
மின்மினிதான் உறங்குமே...

கன்னத்திதழ் மீதிலே
செவ்வந்தியாய் சிவக்குமே...
செவ்வந்தியாய் சிவந்த இதழில்
இதழுரசவேண்டுமே...

வெண்ணிலவங்கே
முகம்மறைக்கும் வகைபோலே...
உன் வெண்ணிடையில்
துயில்சுற்றும் மறைவாக...

சங்கீதம் அழகிங்கே
உன்கொலுசில் சேர்த்து...
வாழுமுயிர் படையெடுக்கும்
 உன்னழகைக்கோர்த்து...

கவிஞர்_வியன்சீர் ✍️


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.