நிரந்தரமான நீதியை பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

தமிழ் தேசிய பரப்பிலே இருக்க கூடிய கட்சிகள் அனைத்தும் பேதங்களை மறந்து நிரந்தரமான நீதியை பெறுவதற்கு ஒன்றுபட்டு செயற்படவேண்டம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.


வவுனியா நகரசபை வாயிலில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், “போர் முடிந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும். இறுதிக்கட்ட போரிலே படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவருக்குமான நீதி இதுவரை கிடைக்கவில்லை. மாறாக நல்லாட்சி அரசும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் தமிழ் மக்களுக்கான நீதியை மழுங்கடித்திருக்கின்றார்கள்.

அத்துடன் இராணுவத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பலர் இன்று சரணடைந்த நிலையில் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் தமது உறவுகளுக்காக பலவருடங்களாக வீதிகளிலே இருந்து போராடுகின்றார்கள். எனவே சர்வதேச சமூகம் கோமாவில் இருந்து மீள வேண்டும். எமது மக்களுக்கு ஒரு நீதியை பெற்றுகொடுக்க வேண்டும்.

அத்துடன் இனப் படுகொலையை கண்டித்து அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு எடுத்து செல்வதற்கு தமிழ் தேசிய பரப்பிலே இருக்க கூடிய கட்சிகள் அனைத்தும் பேதங்களை மறந்து நிரந்தரமான நீதியை பெறுவதற்கு ஒன்றுபட்டு செயற்படவேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.