இலங்கையின் 30 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் இந்தோனேஷியா கடற்பரப்பில்!!
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கைக்குச் சொந்தமான 30 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் இந்தோனேஷியா கடற்பரப்புக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக மீன்பிடி, நீரியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஜனாதிபதியின் உத்தரவில் இவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மீனவர்கள் காணப்படும் இடத்தை நோக்கி கடற்படைப் படகுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் மீன்பிடி, நீரியியல் திணைக்களம் தெரிவித்தது.
குறித்த மீன்பிடிப் படகுகளில் 180 மீனவர்கள் காணப்படுவதாகவும் அவர்களுக்கு இதுவரையில் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




