"பயங்கரவாதிகள்" என்ற அவப்பெயரை விடுவிக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
The political Violence Matrix வகைப்படுத்தலின்படி, தமிழீழவிடுதலைப்புலிகளை "பயங்கரவாதிகள்" என்ற வரையறுக்குள் அடைப்பதற்கான எவ்வித பண்புகளும் அவர்களிடம் இருந்ததில்லை. (கட்டுக்கதைகளைக் கொண்டுவந்து பூச்சுற்ற விரும்புபவர்கள், முறையான விவாதம் கைவசமிருப்பின் வரவும், அல்லது முகக்கவசம் அணிந்தபடி மாற்றுவழியில் செல்லவும்)
ஓர் நாட்டின் / அரசின் படைபலம், போராளிகள் / கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டால் அதுவே "போர்ச்சூழல்"என்ற சொற்பதத்தை உருவாக்குகிறது. அவ்வாறே; ஓர் நாட்டின்/ நாட்டின் அரசின் படைபலமானது, பொதுமக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டால் அது "பயங்கரவாதம்"எனப்பெயரிடப்படக்கூடிய சூழலை உருவாக்குகிறது.
வன்முறைச் சூழல் என்பது பரந்தளவில் கீழ்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.
முழுஅளவிலானபோர் :எவ்வித பாகுபாடுமின்றி,
இராணுவ அல்லது போராளிகளின் இருப்புக்கெதிராக, இன்னோர் இராணுவம்/ போராளிகள் , எதிரணி நிலைகளை அழித்தொழிக்கும் வரை தொடரப்படும் நடவடிக்கை (இரண்டாம் உலகப்போர் )
போர் அல்லது கட்டுப்பாடற்றபயங்கரவாதம் : அதிருப்தியாளர்கள் / அரசு நடாத்தும் படைகள் , அரசுக்கு எதிராக அல்லது பொதுமக்களுக்கெதிராக பாகுபாடற்று கண்மூடித்தனமாக நடாத்தப்படும் தாக்குதல்.
( ருவாண்டா இனப்படுகொலை)
மட்டுப்படுத்தப்பட்டபோர் :எதிரிகளை அழிக்க அல்லது குறுகிய அரசியல் நலனிற்காக, பாகுபாடுகளினூடாக அடையாளம் காணப்படும் குழுக்களுக்கு எதிராக நடாத்தப்படும் போர்.
(கொரியத் தீபகற்பத்தில் நடைபெற்ற போர்)
உள்நாட்டுஅடக்குமுறை : உள்நாட்டு கொள்கைக்கு எதிராக அல்லது அதிருப்தியாளர்களால் நிகழ்த்தப்படும்; வன்முறையாக அடையாளம் காணப்பட்ட நிகழ்வுகளுக்கு எதிராக, நிகழ்த்தப்படும் பாகுபடுத்தப்பட்ட படை நடவடிக்கை .
(ஆர்ஜென்ரினிய அரசினால் மேற்கொள்ளப்பட்ட dirty - war என்பது 30,000 பொதுமக்கள் காணாமலாக்கப்பட்டமையைக் குறிக்கிறது)
மூலம்: Peter.C
Terrorist Myths : illusion, Rhetoric, and Reality
The political Violence Matrix வகைப்படுத்தலின் படி,கீழுள்ள நான்குவிதமான வகைகளில் போர்ச்சூழலை உருவாக்கியும், பயங்கரவாதம் என்று வகைப்படுத்தப்பட்ட செயலையும் செய்தது சிறிலங்காவின் அரசாங்கமும் அதன் கூட்டுநாடுகளுமேயாகும் .
மேற்கூறிய வகைகளுள் எவ்வித வகைப்படுத்தலுக்குள்ளும் அடங்காது, சொந்த நிலத்தை மீட்பதற்காக ஆக்கிரமிப்புப் படைகளுக்கதிராகச் சமர் செய்த"விடுதலைப்புலிகள் " மீது, உலகம் திட்டமிட்டுச் சுமத்திய "பயங்கரவாதிகள்" என்ற அவப்பெயரை விடுவிக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
அகவை 44 இல் காலடி பதிக்கும் விடுதலைப் புலிகள்
-தேவன்

.jpeg
)