நயன்தாராவை புகழ்ந்த லேடி சூப்பர் ஸ்டார்!!!
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றால், மலையாள திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக புகழப்படுபவர் நடிகை மஞ்சுவாரியர். கணவர் திலீப்பை விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் திரையுலகில் களமிறங்கிய மஞ்சு வாரியர், சமீபத்தில் தனுஷுடன் நடித்த ‘அசுரன்’ திரைப்படத்தால் புகழின் உச்சிக்கு சென்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை மஞ்சுவாரியர், ‘தான் கடந்த பல வருடங்களாக நயன்தாராவின் அர்ப்பணிப்புள்ள பணியை கவனித்து வருவதாகவும் அவரை போல் தொழிலில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கும் நடிகையை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் சினிமா துறையில் ஒரு பெண் வலிமையாக நிலைத்து நிற்க முடியும் என்றும், புகழின் உச்சியை அடைய முடியும் என்பதற்கும் நயன்தாரா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் பல நடிகைகளுக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் திரையுலகில் மட்டுமன்றி நயன்தாராவின் சொந்த வாழ்க்கை பற்றியும் தனக்கு அதிகம் தெரியும் என்றும் அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தனக்கும் பிடிக்கும்' என்றும் மஞ்சு வாரியார் கூறியுள்ளார்.
நயன்தாரா போலவே மஞ்சு வாரியரும் மலையாளத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்த ’ஹவ் ஓல்ட் ஆர் யூ’ "என்ற படம் தான் தமிழில் ‘36 வயதினிலே’ என்ற பெயரில் ரீமேக் ஆனது என்பதும், அதில் மஞ்சுவாரியர் கேரக்டரில் ஜோதிகா நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)