நிலச்சரிவினால் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது!!!

டென்மார்க்கின் கோபன்ஹெகன் மாகாணத்தில் உள்ள ஆல்டா பகுதியில் கடந்த புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் சில மரங்கள் சாய்ந்திருக்கலாம் அல்லது வீடுகள் இடிந்து இருக்கலாம் என நாம் பொதுவாக நினைப்பதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது.

ஆனால் ஒரு கிராமமே கடலுக்குள் சென்றது என்பதுதான் தற்போது பிரமிக்கும் விசயமாகப் பார்க்கப் படுகிறது. ஆல்டா பகுதி என்பது மலைப் பாங்கான நிலத்திற்கு அருகிலேயே கடல் இருக்கும் ஒரு பகுதியாகும்.

புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின்போது, ஜான் ஃபிரெடெரிக் என்பவர் தனது வீட்டிற்குள் சான்விட்ச் தயாரித்துக் கொண்டிருநதார். வெளியே ஏதோ சத்தம் கேட்கிறது என வெளியே வந்து பார்த்தவருக்கு கடும் அதிர்ச்சி. நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு கிராமமே மிக அழகாக நீருக்கு மேல் மிதந்து சென்று கடலுக்குள் மூழ்கியது. இக்காட்சியைக் கண்டு மிரண்டு போகாமல் அருகில் இருக்கும் மலைக்கு சென்று மிக சாவகாசமாக வீடியோ ஒன்றையும் பிரடெரிக் பதிவு செய்திருக்கிறார். அடித்துச் செல்லப்பட்ட கிராமத்தில் அவருடைய வீடு ஒன்று இருந்தது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.