கசூரினா சுற்றுலா மையம் ஜுலை 1 முதல் மீள திறக்கப்படும்

ஜூலை-01 மீளத் திறக்கப்படுகிறது
காரைநகா கசூரினா சுற்றுலா மையம்
உரிய சுகாதார நடைமுறைகளை பேணி, சமூக இடைவௌிகளை பின்பற்றி
காரைநகர் பிரதேச சபையின் கசூரினா சுற்றுலா மையம் எதிர்வரும் ஜூலை -1 புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என காரைநகர் பிரதேச சபை தவிசாளர் வி.கேதீஸ்வரதாஸ்  தொிவித்தார்.

வடமாகாண உள்ராட்சி அமைச்சு அதிகாரிகள், வடக்கு சுற்றுலா நிபுணர்கள் மற்றும் உள்ராட்சி திணைக்கள பிரதிநிதிகளுடன் நேற்று கலந்துரையாடியதற்கமைய இந்த்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

உரிய சுகாதார நியமங்களை பேணுவதற்கான அறிவுறுத்தல்களை சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய நிபுணர் எஸ்.யோகராஜன் வடக்கு மாகாண உள்ராட்சி அமைச்சின் திட்டப்பணிப்பாளர் சி.சிவபாலன் மற்றும் உள்ராட்சி திணைக்கள பிரதிநிதி இ.கிருஸ்ணகுமார் மற்றும் உள்ராட்சி அமைச்சின் அதிகாரிகளின் கருத்துக்கு அமைய எதிர் வரும் முதலாம் திகதி முதல் காரைநகர் கசூரினா சுற்றுலா மையம் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி சகல வசதிகளுடன் மீள திறக்கப்படும் எனவும் தவிசாளர் வி.கேதீஸ்வரதாஸ்  கூறினார்.

நாடு தழுவிய ரீதியில் உள்ள உள்நாட்டு, வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் கசூரினா சுற்றுலா மையத்தில் உள்ள மணற்தரையான கடற்கரை,சிறுவர் புங்கா, நவீன வசதி கொண்ட பொதுநோக்கு மண்டபம்,நவீன குளியலறை, நவீன ஐங்கோண பல் சுவைகொண்ட சுற்றுலா உணவகம் (சைவ, அசைவ, பாரம்பரிய) பாரம்பரிய வர்த்தக கடைத்தொகுதிகள், இளைப்பாறு குடில்கள் மற்றும் பல்வேறு நவீன வசதிகளுடன் சுற்றுலா மையம் முழுமையாக செயற்படவுள்ளது.

பல்வேறு தடைகளால் இதுவரை காரைநகர் பிரதேச சபையின் முக்கிய வள வருமான மூலாதாரம் தடைப்பட்டிருந்தது. எம்மால் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் பிரகாரமும், மத்திய, மாகாண அரசின் உயர் மட்ட மற்றும் ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு இணங்க மீண்டும் கசூரினா சுற்றுலா மையம் புதுப் பொலிவுடன் சுற்றுலா பயணிகளுக்கு கைகொடுத்து உதவும் என்றார்.


Blogger இயக்குவது.