ஏயார் இந்தியா ஜூலை 1 முதல் சர்வதேச விமான சேவை தொடங்க வாய்ப்பு
இந்தியாவில் ஊரடங்கில் இருந்து விடுபடும் இரண்டாம் காலகட்டமான ஜூலை 1ஆம் திகதி முதல் சில சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏயார் இந்தியா மற்றும் அமெரிக்காவில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதால் ஏற்கனவே திட்டமிடப்பட்டதை காட்டிலும் முன்கூட்டியே சர்வேதேச விமான சேவை மீண்டும் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனுமதி ஜூன் 30க்கு பிறகு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக டெல்லி-நியூயோர்க், மும்பை-நியூயோர்க் இடையேயான விமான சேவை துவக்கப்படலாம் என அரசுடன் தொடர்புடைய சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோன்று வளைகுடா நாடுகளுக்கு சில தனியார் விமான சேவைகளும் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.