பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு 62 இலட்சத்திற்கு 2009 - 2016 வரை உதவி

உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகம்2009 ம் ஆண்டில் இருந்து  2016 ஆம் ஆண்டுவரை "ஆதரவற்ற பெண்கள் அமைப்பு" என்ற பெயரில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் ,
பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கும்  உதவிகள்  செய்து வந்தது.  2016 ம் ஆண்டிற்கு இற்கு பின்னர்   "உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகம்" என்ற பெயருடன் இலங்கையில்  சட்டப்படி பதிவு செய்து இவ் நிறுவனமானது இயங்கி வருகின்றது.
எமது நிறுவனம் 2009 தொடக்கம் இன்றுவரை பல தடைகளைத்தாண்டியம்  இயங்கி வருகின்றது.
ஆரம்பத்தில் பிள்ளைகளை தடுப்பு முகாமில் இருந்து எடுத்தல், அவர்களுக்கு மாதக்கொடுப்பணவு, திருமணம் செய்து வைத்தல் மற்றும் கல்வி உதவி வாழ்வாதாரம்  என பல வேலைத்திட்டங்களை செய்து முடித்து இருக்கின்றது.
இந்த உதவித்திட்டங்களை செய்து முடிக்க பலர் வியர்வை சிந்தி உழைத்திருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் குமுதன், பிரியா, வசந்தா அம்மா, பிரியன், கஜேந்திராவ், கௌசி, ராஜ், செஞ்சோலைப் பிள்ளைகள், அறிவுச்சோலைப் பிள்ளைகள், ஜேர்மன் நம்பிக்கை ஒளி, டென்மார் நம்பிக்கை ஒளி மற்றும் புலம்  பெயர் உறவுகள் என பலர் உழைத்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் பலகோடி நன்றிகள்.

இந்த காலப்பகுதியில் 20 பிள்ளைகளுக்கு திருமண உதவி வழங்கி சமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2009 தொடக்கம் 2015 வரை நாட்டின் சூழல் மிகவும் ஆபத்தானதாக இருந்தபோதும் மிகவும் சிறப்பாக இந்த உதவித்திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பது ஒரு சாதனை ஆகும்.
  பலமடங்கு  உதவிகளை அன்றைய நேரத்தில் இவ்வமைப்பு செய்திருந்தாலும்  உதவி செய்தமைக்கான ஆவணங்கள்  வாங்குவதே மிகவும் கடினமான காலப்பகுதியாக இருந்தமையினால் எம்மிடம்  பல உதவிகளுக்கான  ஆவணங்கள் சரியான கோர்வையில் இல்லை.  என்றாலும் எங்களிடம் உள்ள ஆவணங்களை வைத்துதான் இந்த உதவித்திட்ட தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.
அன்பான உறவுகளே எங்களின் செயற்பாட்டை தொடர்வதற்க்கு உங்கள் உதவியை நாடி நிற்கின்றோம்.
 உங்கள் உதவியை தொடர்வதற்க்கு
ஆர்த்தனன் -+94 (76) 371 7631
வினோத்-+33766758546
மதுசா- +94 (77) 697 6305

நன்றி
உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகம்
Blogger இயக்குவது.