தேனின் மருத்துவ குணங்கள்!!


நம் முன்னோர்கள் இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இதற்கு காரணம் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதற்காகத் தான். சுத்தமான மலைத் தேனில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதனால் தான் இயற்கை வைத்தியங்களில் தேன் முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது .  காயங்களைச் சரிசெய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கியுள்ளன.


முக்கியமாக தேன் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றதும் கூட. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். மேலும் தேன் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும். இத்தகைய தேனை ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா?

இரத்த அழுத்தம் குறையும்

நல்ல தூக்கம் கிடைக்கும்

எடை குறைய உதவும்

வறட்டு இருமல் மருந்து

சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும்

ஆரோக்கியமான கல்லீரல்

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

செரிமானத்தை மேம்படுத்தும்

தேனின் நன்மைகளை அறிந்து தினமும் தேன் பயன்படுத்துங்கள்...

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.