மனவலி - கவிதை!!

நாளும்
அளவு மீறும்
நுண்ணுயிரித் துயரில்
உலகுயிர்


தொற்றினும்
துரிதமாய்ப் பரவும்
அச்சமும்
அகவுளைச்சலுமே
தாங்கொணாப்
பெருங்கொடிது
இப்பொழுது

அச்சம் தவிர்த்தலே
அருமருந்து
நமக்கு

நம்பிக்கை ஒன்றே
நலம் காக்கும்
புது ரத்தம்

காலம்
தாழ் திறக்குமா
காத்திருப்பில்
மகிழ் திரும்புமா

தொன்றுபடு தமிழே
வென்று எடு
உலகுயிர் வாழ்வை

வலிக்கிறது மனம்...

கே.விமணி

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.