வாழைச்சேனை காகித தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு அரசு நடவடிக்கை

வாழைச்சேனை காகித தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


கடந்த மாதம் தொழிற்சாலையில் இயந்திரங்கள் இயக்கி பார்க்கப்பட்டது. எனினும் இங்குள்ள இயந்திரங்கள் மின் இணைப்புக்கள் பழுதுபார்க்க வேண்டியிருந்தது.

இந்நிலையில் கடற்படையின் மின் மற்றும் மின்னணு பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இயந்திரங்கள் மற்றும் மின் இணைப்புக்களை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலையில் உள்ள இரண்டு பெரிய இயந்திரங்களில் ஒன்று மீண்டும் செயல்படும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் கிழக்கு கடற்படை குழுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Blogger இயக்குவது.