பிரான்ஸ் ஈபிள் கோபுரம் இன்று மீண்டும் திறப்பு 📷
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் மூன்று மாதங்களின் பின் இன்று 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
324 மீற்றர் (1,063 அடி) உயரமுள்ள ஈபிள் கோபுரம் மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் விதிக்கப்பட்ட கொரோனா சமூக முடக்கல்களுடன் மூடப்பட்டது.
மீண்டும் இன்று முதல் திறக்கப்பட்டாலும் குறைந்த எண்ணிக்கையானவா்களே உடனடியாக அனுமதிக்கப்படவுள்ளனா். அத்துடன் கோபுரத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் தளங்களுக்கு மட்டுமே மக்கள் செல்ல முடியும். அதற்கு மேல் உள்ள தளங்களுக்கு செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோபுரத்தில் உள்ள மின்தூக்கிகளைப் பார்வையாளர்கள் பயன்படுத்த அனுமதியில்லை.
பார்வையாளர்கள் படிக்கட்டுகளை மட்டுந்தான் பயன்படுத்தமுடியும்.
ஈபிள் கோபுரத்தைப் பாா்வையிட வரும் 11 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.