இரு திருட்டு சம்பவங்கள் தொடர்பில் ஐவர் கைது!!

திருகோணமலை, தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் இரு இடங்களில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து களவு போன பொருட்கள் மீட்கப்பட்டு கொள்ளையர்கள் ஐவரை கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலையூற்று பிரதேசத்தில் கடந்த ஒன்றறை மாத காலமாக திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதன் அடிப்படியில் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின் அடுத்து கொள்ளையர்கள் ஐவரை கைதுசெய்ததாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தொலைக்காட்சி பெட்டி, குளியலறை பொருட்கள், தையல் இயந்திரம், மின்விசிறி போன்ற பொருட்கள் மீட்கப்பட்டள்ளன .
கொள்ளையர்கள் ஐவரும் பாலையூற்று பிரதேசத்துச் சேர்ந்த புகையிரத வீதி, பூம்புகார் வீதி, முகம்மதியா நகர், முருகன் கோயிலடி இடங்களைச் சேர்ந்த 21, 22, வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகதபர்கள் ஐவரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.