இன்று 1,685: 300ஐ கடந்தது கொரோனா பலி!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35,000 த்தை நெருங்கியது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு மெல்ல உச்சம் தொட்டு வருகிறது. அதிலும் பெரும்பாலான பாதிப்புகள் சென்னையில்தான் பதிவாகின்றன. கடந்த 7 நாட்களுக்கும் மேலாக 1,000 பேருக்கு அதிகமாகவே கொரோனா பாதிப்பு பதிவாகிறது. அந்த வகையில் இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சுகாதாரத் துறை இன்று (ஜூன் 9) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 16,279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 798 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை பூரண நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை 18,325 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 12,421 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை 5,93,189 பேருக்கு பரிசோதனை நடைபெற்றுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. அதுபோலவே, இன்று மட்டும் கொரோனாவுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307 ஆக மாறியுள்ளது.
தலைநகர் சென்னையில் இன்று அதிகபட்சமாக 1,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,289 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 158, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 32, மதுரை மற்றும் வேலூரில் தலா 16 பேருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது.
எழில்