டுபாயிலிருந்து நாடு திரும்பிய 290 இலங்கையர்கள்


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டுபாய் நாட்டில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் இன்று (18) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.226 ரக விசேட விமானம் மூலம் இவர்கள் நாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அவர்களை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 4 ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.