சிறு வணிகர்களுக்காக பிரான்சில் 100 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு!

பிரான்ஸில் இல் து பிரான்ஸ் பிராந்தியத்துக்குள் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்காக 100 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை இல் து பிரான்ஸ் மாகாணமும் (Région Île-de-France) பிராந்திய வங்கியும் (Banque des Territoires) இணைந்து ஒதுக்கியுள்ளன.
கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிறு தொழில்கள், வணிகர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட உள்ளது. மொத்தமாக 70 நகரங்கள் இந்த தொகையினால் பயனடையவுள்ளனர்.
இந்த 100 மில்லியன் யூரோக்கள் தொகையில் 14 மில்லியன் யூரோக்கள் நிதியை Métropole du Grand Paris (MGP) அமையமும், 10 மில்லியன் யூரோக்களை பரிஸ் நகரசபையும் வழங்கியுள்ளது.
0 இல் இருந்து 20 ஊழியர்கள் வரை பணிபுரியும் சிறு நிறுவனங்களுக்கு இந்த தொகை வழங்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட 10,000 நிறுவங்களுக்கு இந்த தொகை பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.