இனி கூகிள் மேப், கொரோனா எச்சரிக்கையுடன்

சமீபத்திய கூகிள் மேப்ஸ் வெளியீட்டில் பொது வெளியில் மக்கள் நுழைவதற்கு முன் முக்கியமான பயணத் தகவல்களைக் கண்டறிய உதவும் அம்சங்கள் உள்ளன.


கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில், அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உணவகங்கள், கடைகள் மற்றும் வெகுஜன போக்குவரத்து அமைப்புகளுக்குத் திரும்புகின்றனர். இதனை கணக்கில் கொண்டு, கூகுள் மேப்ஸின் சமீபத்திய வெளியீட்டில் மக்கள் வீட்டை விட்டுச் செல்லும் முன் முக்கியமான பயணத் தகவல்களைக் கண்டறிய உதவும் அம்சங்கள், எச்சரிக்கைகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.



IOS மற்றும் Android ஆப்களில் இப்போது அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கொலம்பியா, பிரான்ஸ், இந்தியா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, ஸ்பெயின், தாய்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் ஆகிய நாடுகளில் உள்ள உள்ளூர் போக்குவரத்து நிலவரங்களின் பொருத்தமான எச்சரிக்கைகளைக் காட்டும் வகையில் தயாராகியுள்ளது. இந்தோனேசியா, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் உள்ள மருத்துவ வசதிகளுக்காக இந்த வாரம் முதல் கட்டமாக தொடங்கும் இந்த ஆப், விரைவில் அனைத்து நாடுகளிலும் வரவுள்ளது.



கூகிள் மேப்ஸின் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் ரமேஷ் நாகராஜன் தனது பிளாகில், "இந்த எச்சரிக்கைகள் அரசாங்கம் பாதிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்து சேவைகளை கட்டாயப்படுத்தினால் அல்லது பொது போக்குவரத்தில் முகமூடியை அணிய வேண்டுமென்றால் அதற்கேற்ப உங்களை தயார் செய்ய உதவும். கொரோனா வைரஸின் காலத்தில் பயணம் செய்வது என்பது மருத்துவ வசதி வழிகாட்டுதல்களைச் சரிபார்ப்பது, சோதனை மையத்தின் தகுதியை சோதனை செய்வது போன்ற கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். அத்துடன் நம் பயணத்தில் இருந்து திருப்பி விடப்படுவதைத் தவிர்ப்பது அல்லது உள்ளூர் சுகாதார அமைப்பிற்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துவதையும் இவை தடுக்கும்" என்று எழுதினார்.



மேலும், "உள்ளூர், மாநில மற்றும் கூட்டாட்சி அரசாங்கங்களிடமிருந்தோ அல்லது அவர்களின் வலைத்தளங்களிலிருந்தோ அதிகாரப்பூர்வ தரவைப் பெற்று, இந்த விழிப்பூட்டல்களை நாங்கள் காண்பிக்கிறோம்" என்று வலைப்பதிவில் கூறியுள்ளார். கூகிள் மேப்ஸில் உள்ள பயனர்களுக்கு இந்த பயனுள்ள தரவை இன்னும் அதிகமாகக் கொண்டு சேர்க்க உலகெங்கிலும் உள்ள பிற ஏஜென்சிகளுடன் தீவிரமாக பணியாற்றி வருகின்றது கூகுள்.

"கொரோனா வைரஸ் நிச்சயமாக நாம் உலகில் இயங்கும் வழியை பாதித்துள்ளது" என்று நாகராஜன் தனது பிளாகில் எழுதினார். மேலும், "உலகெங்கிலும் உள்ள நகரங்களும் நாடுகளும் ஏற்றுக்கொள்வதால், மிகவும் பொருத்தமான தகவல்களை உங்கள் விரல் நுனியில் கொண்டு வருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே நீங்கள் தயாராக இருக்கும்போது, நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீட்டை விட்டு வெளியேறலாம்"என கூறியுள்ளார்.

முன்பை விட, சமகாலச் சூழலுக்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் வசதி, மக்கள் அதிகமுள்ள பகுதிகளை முன் கூட்டியே காட்டிவிடும். மேலும் முகமூடியை அணிந்து கொள்ளவும் எச்சரிக்கை கொடுத்துவிடும். அதற்கேற்றார் போல பயணர்கள் கூட்டம் குறைவான பகுதியை தேர்ந்தெடுக்கவும்,பொது இடங்களில் நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளியை பேணவும் கூகுள் வழிகாட்டவுள்ளது.

-முகேஷ் சுப்ரமணியம்
Blogger இயக்குவது.