தியானன்மென் நினைவுதினத்தை நினைவுகூர்ந்த ஆயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள்!

கொரோனா ரைவரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு மத்தியில், தியானன்மென் நினைவேந்தல் கூட்டத்துக்கு ஹொங்கொங் பொலிஸார், முதல்முறையாக தடைவிதித்திருந்த நிலையில், தடையினையும் மீறி ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆதரவாளர்கள் கூடி, தியானன்மென் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தியனன்மென் சதுக்க படுகொலையை நினைவுகூறுவதற்காக கூடிவந்த ஆயிரக்கணக்கான மக்கள், நேற்று (வியாழக்கிழமை) முகக்கவசம் அணிந்து மெழுகுவர்த்திகளை ஏந்தி படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தடைகளையும் மீறி இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டது குறித்து 51 வயதானொருவர் கூறுகையில், ‘நினைவில் கொள்வதற்கும் வருத்தப்படுவதற்கும் எங்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. நாங்கள் தப்பிப்பிழைத்தவர்களை அனுமதிக்க வேண்டும் அவர்கள் இழந்த குழந்தைகளையும் அன்பானவர்களையும் நாங்கள் மறக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என கூறினார்.
சீனாவில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள தியானன்மென் சதுக்கத்தில் கடந்த 1989ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதி போராட்டம் நடைபெற்றது.
மாணவர்களும் தொழிலாளர்களும் அமைதியான முறையில் நடத்திய இந்தப் போராட்டத்தை சீன அரசு முரட்டுத்தனமாக அடக்கியது.
சீனாவின் ஹொங்கொங்கிற்கான சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டம், சீன நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளநிலையில், அதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.