பாரதியார் சிலையில் படர்ந்துள்ள போஸ்ரர்கள்!
யாழ்.மாவட்டத்தில் பொது இடங்களில் ஒட்டப்படும் தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டு வருகின்றது.
இந் நிலையில், யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள பாரதியார் சிலை மீது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள நிலையில் அவற்றினை அகற்றவேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
தேர்தல் காலத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவது வழமை. எனினும் பொது இடங்களில் அவ்வாறு ஒட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நல்லுார் ஆலய சுற்றாடலில் பாரதியார் சிலை மீது வேட்பாளர் ஒருவர் தேர்தல் சுவரொட்டியை ஒட்டியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் தேர்தல் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சுவரொட்டிகள் அகற்றப்படாமல் உள்ளதாக பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo