வரும் திங்கள் முதல் பாடசாலைகள் ஆரம்பம்!!
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கையின்கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை முதற்கட்டத்தின் கீழான பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை முகாமைத்துவம், கல்விசாரா ஊழியர்கள் போன்றோர் ஆகியோருக்காக அன்றைய தினம் பாடசாலைகள் திறக்கப்படவருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொற்று நீக்கம் செய்தல், தூய்மைபடுத்துதல், பாடங்களுக்கான நேர அட்டவணை தயாரித்தல் போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள். இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாகவும் கூறினார்.
அத்துடன் அன்றைய தினத்தில் தரம் 5ஆம், 11ஆம், 13ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வது அவசியமாகும் என்றும் பத்தாம், 12ஆம் தரங்களில் கற்கும் மாணவர்கள் ஜூலை மாதம் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo